டெல்லி: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், தமிழகத்தை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் உச்ச நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 50 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு, எதிர்க் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சலோனி குமார் தொடர்ந்த வழக்கிற்கும், தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் தாக்கல் செய்த மனுக்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.
Patrikai.com official YouTube Channel