ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.  முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையேயான மோதல் காரணமாக,  ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

ராஜஸ்தான்  மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக உள்ள மூத்த தலைவர்  அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், இன்று காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் முதல்வரின் வீட்டில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கட்சி தலைமை முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜோதிராதித்ய சிந்தியாவின்  ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டு அமைதிப்படுத்தும் முயற்சி ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும், சலசலப்பு நீடித்து வருகிறது.
ஏற்கனவே ஜோதிராதித்யா சிந்தியாவில் மத்தியபிரதேசத்தில் ஆட்சியை பறிகொடுத்துள்ள நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
துணைமுஐதல்வர் சச்சின் பைலட்டை  சமாதானம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.  அசோக் கெலாட்டை பதவி விலகச் செய்து,  சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் அசோக் கெலாட் இல்லாத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், இதில் சச்சின் பைலட்டுக்கு சட்டமன்ற கட்சித்தலைவர் பதவி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டம் முடிவடைந்ததும், அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் புனியா,  ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட் சரியான வேட்பாளராக இருந்தார், ஆனால் அசோக் கெஹ்லோட் பொறுப்பேற்றார், அன்றிலிருந்து கட்சியில் ஒரு மோதல் தொடங்கியது. இன்று நடப்பது அந்த மோதலின் விளைவாகும். மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்று கூறினார்.