சென்னை

ந்தே பாரத் ரயிலுக்குத் தேவையான எந்திரம் கொள்முதலுக்காகச் சீன நிறுவனத்துடன்  செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரயில் என அழைக்கப்படும் டிரெயின் 18 வகை ரயிலுக்குத் தேவையான பல பொருட்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.   இவ்வகையில் எந்திரம் உள்ளிட்ட  பல பொருட்களுக்கான ரூ.1500 கோடி மதிப்பிலான விலைப் புள்ளிகள் கடந்த டிசம்பர் மாதம் கேட்கப்பட்டிருந்தன.

இதில் 6 நிறுவனங்கள் க்லந்துக் கொண்டன.  இவற்றில் பெல், மேத்தா குழுமம், எலெக்ட்ரோவேவ்ஸ், பாரத் இண்ட்ஸ்டிரிஸ் மற்றும் பவர்நெடிக்ஸ் ஆகியவை இந்திய நிறுவனமாகும்.   ஆறாம் நிறுவனம் சீன நிறுவனமான யாங்ஜி எலெக்டிரிக் நிறுவனம் ஆகும்.  இவை அனைத்தும் 44 எந்திரங்களுக்கான விலைப்புள்ளிகளை அளித்து அதில் சீன நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சீனப் படைகள் இந்திய ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் இருந்து சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்து வருகிறது.  அவ்வரிசையில் இந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்த விலைப்புள்ளிகள் சர்வதேச அளவில் கோரப்பட்ட போதிலும் ஒரே ஒரு சீன நிறுவனம் மட்டுமே விலையை அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.