சென்னை:
ரும் 27ந்தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்  அறிவித்து உள்ளது.
 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து அனைத்து ஆண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வுகளை ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்தவுள்ளதாக  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  தெரிவித்தார்.
கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெற உங்ளளது.
இந்த நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படு வதாக தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  13-ம் தேதி முதல் 17ந்தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. மேலும, www.dge.tn.go.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடித்த பின்னர், 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.