டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்,, டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அது பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பொது முடக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் மேலும் 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை ஒபபுதல் அளித்துள்ளது.
ஜூன் வரை 3 மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நீட்டிப்பு மூலம் மத்திய அரசுக்கு 13, 500 கோடி ரூபாய் செலவாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு லட்சம் வாடகை வீடுகள் கட்டித் தரவும் அமைச்சரவை ஒ்ப்புதல் அளித்துள்ளது.
இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையையும் மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நிறுவனங்களின் பங்களிப்பான 12%, பணியாளர்களின் பங்களிப்பான 12% என 24% அடங்கும்.
இதன்மூலம் மத்திய அரசுக்கு மொத்தம் 4,860 கோடி ரூபாய் செலவாகும். நாடு முழுவதும் 72 லட்சம் பணியாள்ரகள் பயன் பெறுவார்கள். இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்று கூறினார்.