புதுச்சேரி:

புதுச்சேரி ஆளுநர் மாளிகையின்அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 48 மணி நேரம் ராஜ்நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

குறிப்பாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துறை, நகர அமைப்பு குழுமம், நகராட்சி அலுவலகம், காவல்நிலையங்களும் இதிலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாளிகை 48 மணிநேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.