
உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை தட்டி சென்ற ஒரே வீரரும் இவர்தான்.
இந்நிலையில் உசேன் போல்ட் அவரது செல்ல மகளை இந்த உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளார்.
தன்னுடைய மனைவி காசி பென்னட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள உசேன் போல்ட் தங்களுடைய செல்ல மகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CCWNMuxFp6d/
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள உசேன் போல்ட், நமது மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் உடன் நாம் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel