துபாய்: 
துபாய் சுற்றுலாத்துறை திறக்க படுவதாக துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெற்றிகரமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்திய துபாயின் சுற்றுலாத்துறை நேற்று திறக்கப்படுகிறது என்று அதிகாரபூர்வமாக துபாய் அரசு அறிவித்துள்ளது. மேலும் உணவகங்களும் திறக்கப்பட இருக்கின்றன,  அதுமட்டுமல்லாமல் விமான சேவையும்  மீண்டும் துவங்க உள்ளது.
துபாய்க்கு வரும் அனைத்து சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கொரோனா பரிசோதனை தகுந்த முறையில் செய்யப்படும். முதலில் அவர்கள் கொரோனாவிற்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே சுற்றுலாவிற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
துபாய் சுற்றுலா துறையின் நிர்வாக இயக்குனர் ஹிலால் சையீத் அல்மாரி இதை பற்றி கூறுகையில்:  இங்கு வரும் அனைவரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்,  தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனாவிற்கு பரிசோதனை செய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. துபாயில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்வுக்கும் நாங்கள் பொறுப்பேற்கின்றோம். ஆகையால் இங்கு குடியிருப்பவர்களுக்கு ம், இங்க வரும் விருந்தினர்களுக்கும், நாங்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
துபாய் அரசின் அயராத உழைப்பினாலும் மக்களின் ஒத்துழைப்பினாலும், நாங்கள் வெற்றிகரமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இங்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்காகவே உணவகங்கள் மற்றும் விமான சேவையும் திறக்கப்பட உள்ளது.
தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் எங்கள் அரசாங்கத்தின் ஈடுபாடு திருப்தி அளித்துள்ளதாக சர்வதேச கணக்கெடுப்பில் நாங்கள் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளோம் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம். அனைத்து ஊடகங்களிலும் துபாய் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதை பற்றி பேசும்பொழுது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நாங்கள் தொடர்ந்து எங்கள் பணியை விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக செய்து வருவோம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் எங்களுடைய பொறுப்பு. ஆகையால் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் சரியான முறையில் பரிசோதனை செய்யப்பட்டு,  அனுமதிக்கப்படுவர் என்றும் ஹிலால் சையீது அல்மாரி கூறியுள்ளார்.