சில ஆண்டுகளுக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா, புருண்டி, ஜாம்பியா முதலான ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நீதிமன்ற அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க தலைவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் இருந்து ஒரே சமயத்தில் கூட்டாக விலக வேண்டும் என்று ஒரு யுக்தியை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளின் பெரிய முடிவாக கருதப்படும் இது ஒரு ஆப்பிரிக்க யூனியன் உச்சிமாநாட்டில் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னே இரகசியமாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஆப்பிரிக்கத் தலைவர்கள் கொண்டிருந்த பொறுமையின்மையின் சமீபத்திய வெளிப்பாடாகும். ஆப்பிரிக்காவில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் மீது சர்வத் தேச நீதிமன்றம் சரியாக கவனம் செலுத்தத் தவறியதாக ஆப்பிரிக்கத் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், தென்னாப்பிரிக்கா, புருண்டி மற்றும் ஜாம்பியா அனைத்தும் சர்வதேச நீதிமன்ற அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான திட்டங்களை அறிவித்தன. இது மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம் என்ற கவலைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
உச்சிமாநாட்டிற்கான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் தொடர்பு அலுவலகத்தின் தலைவரான டிசையர் அசோக்பாவி, ஆப்பிரிக்க நாடுகளின் இந்த முடிவை உறுதிப்படுத்தினார். கான்டினென்டல் அமைப்பின் அதிகாரபூர்வ சபையையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த நாடுகள் நீதிமன்ற அமைப்பில் இருந்து கூட்டாக அல்லது தனித் தனியாக வெளியேறும் முடிவைப் பொருந்து தங்களுக்குள் அணிபிரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை அமைத்த, ரோம் ஒப்பந்த சட்டத் திருத்தத்தின் உண்மையான பொருளைப் பெரும்பான்மையான நாடுகள் விரும்புவதாக நீதிமன்ற வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் எழுந்துள்ள இந்தக் கிளர்ச்சி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயத்தன்மையை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைக்கிறது.
சில ஆப்பிரிக்க நாடுகள் குறிப்பாக ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களை குறிவைத்து தாக்குவதாக சர்வதேச நீதிமன்றத்தின் மீது இந்த நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. உதாரணமாக, சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் 2009 ஆம் ஆண்டு டார்பூரில் கலவரங்களை ந்திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். 2007 தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைக்கு கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவை குற்றஞ்சாட்டியதன் மூலம் ஐசிசி ஆப்பிரிக்க நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கென்யாவின் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாததாக ஐசிசி கூறியதால், இந்த வழக்கு நிற்கவில்லை.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சர்வதேச நீதித் திட்டத்துடன் எலிஸ் கெப்லர், ஐசிசியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு காலக்கெடு இல்லை என்றும் “இந்த நடவடிக்கைக்கு சில உறுதியான பரிந்துரைகள்” இருப்பதாகவும் கூறினார். நைஜீரியா, செனகல் மற்றும் காங்கோ குடியரசு உட்பட பல ஆப்பிரிக்க நாடுகள் சமீபத்திய மாதங்களில் ஐசிசிக்கு ஆதரவாக பேசியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. இருந்தும் புரூண்டி தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் இது மேற்குலக நாடுகளுக்கும், ஐக்கிய ஆடுகள் சபைக்கும் ஆப்பிரிக்க நாடுகள் அளித்த அதிர்ச்சி வைத்தியமாகவே பார்க்கப்பட்டது.
அசோசியேட்டட் பிரஸ்ஸால் பெறப்பட்ட இத்திட்டத்தின் ஒரு வரைவு, ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் சொந்த நீதி வழிமுறைகளை வலுப்படுத்தவும், ஆப்பிரிக்க நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்தவும் “ஐ.சி.சி மீதான மதிப்பைக் குறைப்பதற்காக” என்ற காரணத்துடன் பரிந்துரைக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுதான் போல!
தமிழில்: லயா