வாஷிங்டன்
சீன செயலிகளைத் தடை செய்ய அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அரசுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீன தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.
இதையொட்டி நாட்டு மக்கள் சீனாவின் மேல் கோபம் கொண்டுள்ளனர்.
அகில இந்திய வர்த்தக சங்கம் சீனப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையொட்டி இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்தது.
அமெரிக்காவிலும் இதே கோரிக்கை எழுந்துள்ளது.
சீன செயலிகளைத் தடை செய்யப் பல வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க அரசு செயலர் மைக் பாம்பியோ செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
அவர் அமெரிக்க அரசு சீன செயலிகளைத் தடை செய்வது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.