இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,387 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தை கடந்துவிட்டது.
தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,25,283 ஆகும். பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 68 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துவிட்டனர்.
Patrikai.com official YouTube Channel