லக்னோ: தனது பண்ணை வீட்டு மைதானத்தில், பந்துவீச்சுப் பயிற்சியைத் துவக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
தற்போது 29 வயதாகும் முகமது ஷமி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து பலரின் கவனத்தைப் பெற்றார்.
கொரோனா பரவல் காரணமாக, இவரும் பயிற்சியில் ஈடுபடாமல் வீட்டில் முடங்கியிருந்தார். இந்நிலையில், ரோகித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா மற்றும் புஜாரா ஆகியோர் தங்களின் பயிற்சிகளைத் துவக்கியதையடுத்து, முகமது ஷமியின் தனது பண்ணை வீட்டு மைதானத்தில், பந்துவீச்சுப் பயிற்சியைத் துவக்கியுள்ளார்.
தனது சகோதரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை, தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடுகையில் அணிந்திருக்கும் நீல நிற ஜெர்சியை அணிந்துள்ளார்.

[youtube-feed feed=1]