வாஷிங்டன்:
கொரோனா பாதிப்பிலும் உலகின் நம்பர் ஒன்றாக திகழும் அமெரிக்காவில்,  ஜூனியர் டிரம்ப் என அழைக்கப்படும் அதிபர் டிரம்ப் மகனின்  காதலியான கிம்பர்லி கில்ஃபோயில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் டிரம்பின் பிரச்சார அதிகாரியாகவும்  இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,904 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது இந்த நிலையில், அதிபர் டிரம்பின் மகனின் காதலியான கிம்பர்லிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகனின் காதலியும், டிரம்ப் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான உயர்மட்ட நிதி திரட்டும் அதிகாரியுமான கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் கிம்பர்லியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள தெற்கு டகோட்டாவுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபர் டிரம்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்று கருதப்படும் அனைவருக்கும் வழக்கமாக  நடத்தப்பட்ட சோதனையில் கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 28,90,588 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று  616 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,32,101ஆக உயர்ந்துள்ளது அதே நேரத்தில் 38,987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த 12,35,488-ஆக அதிகரித்துள்ளது.
நோய்த்தொற்றுகள் கடுமையாக அதிகரித்து வந்தாலும், இறப்பு விகிதம் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.