திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,964 ஆக உள்ளது.
இன்று தொற்று உறுதியான 138 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். 39 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 27 பேர் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 201 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். தற்போதுவரை 2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel