அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதா சுவேதா அவ்வப்போது மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கும் படம் ஐபிசி 376. இப்படத்தை ராம் குமார் சுப்பிரமணியன் இயக்குகிறார். எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார்.

அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நந்திதா சுவேதா ரவுடிகளை ஒடவிட்டு அடித்து வீழ்த்தும் அசத்தலான சண்டைக் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. வைஜெயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தியாக அவர் மாறிவிட்டரோ என டிரெய்லரை பார்க்கும்போது எண்ணத் தோன்றுகிறது.
Patrikai.com official YouTube Channel