நடிகர் வரலட்சுமி சமூக அவலங்களை தட்டி கேட்க தயங்குவதில்லை. அறந் தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்ட சம்பவத்தை அறிந்து கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளி யிட்டிருக்கும் மெசேஜில் ’இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடைய வர்கள் தான். அதுதான் மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதிலாகவும் இருக்கும். நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்’ என கடுமையான கண்டனம் வெளிப் படுத்தி இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel