டில்லி

பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆயுள் முழுவதும் அரசு மாளிகையில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பல வருடங்களாகச் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் க்ருப்புப் பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்படு வந்தது. மத்திய அரசு சமீபத்தில் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது  அதன்படி முன்னாள் பிரதமர்களுக்குப் பதவி விலகி 5 ஆண்டுகள் வரை அவருக்கும் குடும்பத்துக்கும் கருப்புப் பூனை பாதுகாப்பு வழங்கப்படும் என மாற்றப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 30 ஆண்டுகள் ஆக உள்ளது.  எனவே அவருடைய குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கருப்புப் பூனைப்படை விலக்கப்பட்டு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

பிரியங்கா காந்திக்குக்  கருப்புப் பூனைப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதால் அவர் பல ஆண்டுகளாக வசித்து வரும் டில்லி மோதி எஸ்டேட் பங்களாவில் இருந்து காலி செய்ய மத்திய வீட்டு வசதித்துறை உத்தரவிட்டது.  வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் அவர் காலி செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் அவரிடம் அபராத வாடகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி மற்றும் முரலி மனோகர் ஜோஷி ஆகியோருக்கும்  அரசு இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.   இவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் அல்லது அரசு அலுவலகத்தில் எவ்வித பொறுப்பும் வகிக்கவில்லை.  அத்துடன் இவர்களுக்குக் கருப்புப் பூனைப்படை பாதுகாப்புக்கும் கிடையாது.   இவர்கள் இருவருக்கும் மிரட்டல் விடப்படலாம் என்னும் ஊகம் உள்ளதால் இந்த வசதியை  அரசு அளித்துள்ளது.

இதில் அத்வானிக்கு ஆயுள் முழுவதும் அரசு இல்லத்தில் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது  முரளி மனோகர் ஜோஷிக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி வரும் 2022 ஆம் வருடம் ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அது மேலும் நீட்டிக்க அமைச்சரவையில் ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.  தற்போதைய அரசு உத்தரவுப்படி கருப்புப் பூனைப்படை பாதுகாப்பு இல்லாதோர் அரசு இல்லங்களில் வசிக்க முடியாது என்றாலும் மத்திய அமைச்சகத்தின் சிபாரிசின் பேரில் சிறப்பு அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.