டெல்லி:
பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் இணையதளமான https://t.co/sIVqAMtPeRஎன்ற ஆன்லைன் போர்டலில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம் அல்லது தாங்களே விண்ணப்பிக்கலாம் விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
2021 குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், 2020 மே 1-ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கான கடைசி நாள் 2020 செப்டம்பர் 15-ந் தேதியாகும்.
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளாகும். அதன்படி, கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், சிறப்பாக செயலாற்றியவர்கள், மகத்தான சாதனை படைத்தவர்கள் அவர்களின் பணியை பாராட்டி, கவுரவிக்கப்படும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விருதுக்கான தகுதியுடைவர்களை தேர்வு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பொதுமக்களே பரிந்துரைக்கும் வகையில் இணையதள முகவரி வழங்கப்பட்டு உள்ளது.
பத்ம விருதுகளுக்கான நியமனங்கள்/ பரிந்துரைகள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.