சினிமாவில் சிவப்பு நிற தோல்காரர்கள் தான் நடிக்க வேண்டும் என்ற விதியெல் லாம் மலையேறிவிட்டது. நிறபாகு பாடு இல்லாமல் நடிப்புக்கும் திறமைக் கும் மரியாதை தரும் தருணம் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது நிறம் பற்றி பிரபல நடிகர் ஒருவர் செய்த கிண்டலால் நடிகை கதறி அழுத சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். அக்ஷய்குமாருடன் இந்தியில் இக்கே பி பக்கா, சவுகாந்த் படங்களில் ஜோடி யாக நடித்த ஷாந்தி பிரியா பேட்டி ஒன்றில், ’படப்பிடிப்பில் என் நிறம் பற்றி பலருக்கு முன்பு என்னை கிண்டல் செய்தார் அக்ஷய்குமார். அதைகேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர். எனக்கு அவமானமாகி விட்டது. வேதனையை அடக்கமுடியா மல் அழுதுவிட்டேன். இதுபோல் நிறைய அவமானம் பல இடங்களில் அன்பவித்திருக்கிறேன்’ என்றார்.
ஷாந்தியின் இந்த பேட்டி அக்ஷய் குமாருக்கு எதிராக திரும்பியது. அவரை பலரும் திட்டித் தீர்த்தனர். அதைக் கண்டு ஷாக் ஆன ஷாந்தி விளக்கம் அளித்தார்.
’அக்ஷய்குமார் படப்பிடிப்பில் ஜோவி லாக பழகுவார். என் நிறம் பற்றி சொன்னதுகூட என் மனம் புண்பட வேண்டும் என்பதால் அல்ல. ஜாலிக்காகத்தான் என்று நம்புகிறேன். அவரின் கடின உழைப்பு மீது எனக்கு மதிப்பு உண்டு’ என்றார்.
நடிகை ஷாந்தி பிரியா பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை ஆவார்.
Patrikai.com official YouTube Channel