இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தி நடிகர் சல்மான்கான் ஒரு மேடை யில் சந்தித்தனர். அப்போது ரஹ்மான் பற்றி பேசிய சல்மான்.’ ரஹ்மான் ஆவரேஜ் இசை அமைப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் ஆஸ்கர் விருது வென்றிருக்கிறார் . (இப்படி சொன்னபடி ரஹ்மானுக்கு சல்மான் கைகுலுக்க முயன்றார். ஆனால் ரஹ்மான் தன் பாக்கெட்டிலி ருந்து கையை எடுக்காமல் மவுனமாக இருந்தார்) இவர் என் படத்துக்கும் இசைஅமைக்க வேண்டும்’ என்றார்.

இந்நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது ஒரு நிருபர், ’சல்மான் கான் படத்துக்கு இசை அமைப்பீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ரஹ்மான், ‘எனக்கு பிடிப்பதுபோல் அவர் எப்போது படம் நடிக்கிறாரரோ அப்போது அமைப்பேன்’ என்றார். இது சல்மான்கானின் மேடை பேச்சுக்கு ரஹ்மான் தந்த பதிலடியாக அமைந்திருந்தது. இந்த சம்பவம் 2014ம் ஆண்டில் நடந்தது. தற்போது இணைய தளத்தில் அந்த் வீடியோ மீண்டும் பரபரப்பாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel