பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,06,10,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,14,468 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பிரேசிலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 14,08,485 ஆக உள்ளது.
பலியானோர் எண்ணிக்கை 59,656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 7,90,040 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா (27,27,996 பேர்) உள்ளது. 2வது மற்றும் 3வது இடத்தில் முறையே ரஷ்யாவும், இந்தியாவும் உள்ளது.
Patrikai.com official YouTube Channel