ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.
இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சி கூறியுள்ளார். அவருக்குப் பலரும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
https://twitter.com/VetriMaaran/status/1278008005804519424
“நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தீரமிகு ரேவதி, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்போம்”.
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
எப்போதுமே சமூக வலைதளத்திலிருந்து விலகியே இருக்கும் வெற்றிமாறன், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டர் பக்கம் வந்து இந்தச் சம்பவத்துக்குக் கருத்துக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.