உலகெங்கிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், தீவிரத் தொற்றும் தன்மைக் கொண்ட கொரோனா வைரஸ் போய்விட்டது என்று அர்த்தமல்ல. மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சரியான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் ஒரு பகுதியாக, நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இருப்பினும், சில இடங்களில், முகக் கவசம் அணிவது என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே இருக்கிறது. கட்டாயமாக்கப்படவில்லை. உதாரணமாக, உண்மையில், புளோரிடாவில் மக்கள் முகக்கவசம் அணிவதை ணிய வேண்டியதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுவாச அமைப்பு கடவுள் கொடுத்தது. ஆனால், அதை மறைத்து முகக்கவசம் அணிவது நம்மைக் கொல்லும்,” என்பது அவர்களின் வாதம் ஆகும்.
எனவே, வாஷிங்டனின் பிராவிடன்ஸ் சேக்ரட் ஹார்ட் மெடிக்கல் சென்டரின், மருத்துவ ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர். ரிச் டேவிஸ் ட்விட்டரில் ஒரு எளிய பரிசோதனையைப் பயன்படுத்தி முகமூடியை அணிவது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியுள்ளார்.
முகக்கவசம் அணிவது எவ்வாறு சுவாச திரவத்துளிகள் மற்றும் பாக்டீரியாக்களின் பரவலை வெகுவாகக் குறைக்கின்றன என்பதை ஆய்வகத்தில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்க்களை வளர்க்க பயன்படுத்தும் அகார் நுண்ணுயிர் வளர்ப்புத் தளம் கொண்ட ஆய்வகத் தட்டுகளைக் கொண்டு நிரூபித்தார்.
அதன்படி, அவர் முகக் கவசம் அணிந்து கொண்டும், அணியாமலும் அகார் தட்டுகளின் முன் நின்று பேசுதல், பாடுதல், ஒரு முறை மற்றும் இரு முறை தும்முதல் போன்றவற்றைச் செய்தார். பின்னர் அந்த அகார் தட்டுகளை ஆய்வகத்தில் உரிய வெப்பநிலையில் வளர்த்த போது முகக்கவசம் அணியாமல் பேசுதல் பாடுதல் போன்ற செயல்களை மேற்கொண்ட அகார் தட்டுகளில் அதிக அளவில் பேக்டீரியா வளர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது பேசுதல், பாடுதல் மற்றும் தும்மும் போது முகக்கவசம் அணியாததால் தெறித்த திரவத்துளிகள் அந்த அகார் தட்டுகளில் பட்டதால் அதில் இருந்து பேக்டீரியாக்கள் வளர்ந்தன. அதே சமயம், முகக் கவசம் அணிந்தபடி அதே செயல்களைச் செய்த போது அகார் தட்டுகளில் எவ்வித பேக்டீரியாவும் வளரவில்லை.
கீழே காட்டப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்:
மேலே உள்ள படத்தில் ஆய்வாளர் முகக் கவசம் அணிந்து அம்ற்றும் அணியாத நிலையில் அகார் தட்டுகளின் முன் தன் செயல்களை செய்வதைக் காணலாம்.
இடது புறம் உள்ள தட்டுகள் முகக் கவசம் அணியாத நிலையிலும், வலது புறம் உள்ள தட்டுகள் முகக் கவசம் அணிந்தும் செயல்களை மேற்கொண்டவை. அணியாத தட்டுகளில் அதுக பேக்டீரியாக்கள் வளர்ந்துள்ளதையும், முகக் கவசம் அணிந்த தட்டுகளில் பேக்டீரியாக்கள் தடிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
எனவே, அரசு அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கிறதோ இல்லையோ, உங்களை காத்துக்கொள்ள முகக் கவசம் அணியுங்கள்.