தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 2
இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல நூற்றாண்டுகளாக உதவி வருகின்றனர்.
தொற்று நோய்களை குணப்படுத்தும் தேவதைகள் குறித்த முதல் பகுதியை ஏற்கனவே பதிந்துள்ளோம்.
இன்று அதன் இரண்டாம் பகுதி இதோ
தொற்று நோயை குணப்படுத்தும் தேவதைகள் தாந்திரீகம் மற்றும் சூனிய நடவடிக்கைகளில் தொடர்புடையவையாக உள்ள நிலையை ஏற்கனவே பார்த்திருந்தோ. அவ்வகையில் இந்த தெய்வங்களைச் சமாதானப்படுத்த இரத்த சிந்துதல் அதாவது உயிர்ப் பலி கொடுத்தல் அதிக அளவில் உள்ளன. மேலும் குணமடைந்தோர் உடலில் கொக்கி மாட்டுவது, அலகு குத்திக்கொள்வது என உடலை வருத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இதில் இரத்த பலி உள்ளதால் பல உயர்சாதி இந்துக்கள் இவற்றில் இருந்து விலகி இருந்தனர். அவர்கள் கண்டறிந்த மென்மையான வழிபாடு உடல் பாகங்களின் வெள்ளிப்படங்களை அம்மனுக்குச் செலுத்துவது ஆகும். அதே வேளையில் இந்த தெய்வங்கள் பெண் பால் தெய்வங்கள் என்பதால் தாய்மை முன்னிறுத்தப்பட்டது.
போகப் போகத் தடுப்பூசிகள் அதிக அளவில் வந்ததால் இந்த தெய்வ வழிபாடுகள் வெகுவாக குறைந்து போயின. மிகவும் கடுமையான நோய்ப் பாதிப்பு ஏற்படும் போது மட்டும் இந்த தெய்வங்களின் வழிபாடுகள் மீண்டும் தலை தூக்கின. இது மேலும் விரிவடைந்து பெங்களூரு நகரில் போக்குவரத்து விபத்தைக் காக்கும் டிராஃபிக் வட்டம் அம்மன் என மாறியது. இங்கு தினமும் கார்கள் மற்றும் லாரிகள் வரிசையில் கொண்டு வரப்பட்டு ஆசிகள் பெற்றுச் செல்வது வழக்கானது.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தொற்று நோயைப் போக்கும் தெய்வ வழிபாடு மீண்டும் தலை தூக்கி உள்ளது. ஆனால் தீவிரம் அடையவில்லை. இதற்குக் காரணம் தற்போது கோவில்கள் மூடபட்டுள்தால் மக்கள் கோவில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஆகும். இதையொட்டி சமூக வலைத்தள வழிபாடு அதிகரித்துள்ளது எனச் சொல்லலாம். தற்போது கோவில்கள் பல இடங்களில் திறக்காமல் உள்ளதால் இந்த நிலை மேலும் அதிகரிக்கலாம். விரைவில் தடுப்பூசி கண்டறியப்பட்டால் இந்த தெய்வங்களின் பணி சற்றே குறையவும் வாய்ப்புள்ளது.
– நிறைவு –