புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்கத்தை 45% கொள்ளளவாக உயர்த்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம்.
இதற்கு முன்னதாக, கடந்த மே மாதம் 25ம் தேதி, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டபோது, மூன்றில் ஒரு பங்கு கொள்ளளவு மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 15ம் தேதிவரை, வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், சில தேர்ந்தெடுக்கப்பட்ட விமான வழித்தடங்களில் மட்டும், குறிப்பிட்ட காரணங்களுக்காக விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.