டில்லி
முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.48 க்கு மேல் அதிகரித்தால் அது ஒரு சுரண்டல் என சுப்ரமணியன் சாமி முன்பே தெரிவித்துள்ளார் என ஆர்வலர் ஒருவர் கூறி உள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகெங்கும் கச்சா எண்ணெய் தேவை குறைந்ததால் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தது.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அப்போது குறைக்கப்படவில்லை. மாறாக மத்திய மாநில அரசுகள் வரியை உயர்த்தின. தற்போது கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களில் பெட்ரோல் விஅலி ரூ.7.83 மற்றும் டீசல் விலை ரூ.9.22 அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆர்வலர் ஒருவர், “கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத அரசு தற்போது விலையை உயர்த்தி உள்ளது பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி கடந்த 2018 ஆம் வருடம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.48க்கு மேல் அதிகரித்தால் அது ஒரு சுரண்டல் என தெரிவித்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.