டெல்லி: ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்பட நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை இரண்டு மாதங்களுக்கு பிறகு மே 25ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டன.
இந் நிலையில், ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அறிவித்து உள்ளது. ஆனால், சரக்கு விமான போக்குவரத்து தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.