சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை மகன் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும், 2 பேர் மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.
இது தொடர்பாக வரும் 30 ஆம் தேதி புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.