றைந்த திரைப்படை இயக்குனர் ராம நாரயணன் நினைவு தினம் இன்று. அவரது சாதனைகளை பட்டியலிட்டு நினைவஞ்சலி செலுத்தி சிலை வைக்க கோரிக்கை வைத்துள்ளார் தயாரிப்பாளர், மற்றும் பத்திரிகை தொடர்பாளர் விஜய் முரளி. அவர் கூறியதாவது:
எளிமைவலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன். இன்று (22.06.2020) அவரது நினைவு நாள். 1970 களில் ராம் – ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்கு கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். ரகீம் என்ற பெயரில் உலா வந்தவர் எம்.ஏ. காஜா. கவியரசு கண்ணதாச னிடம் உதவியாளராக சேர்ந்து படங்களுக்கு பாடல் எழுத வந்தவர் இராம நாராயணன். எம்.ஏ. காஜா இயக்கத்தில் பல படங்களை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தார். கமலின் விக்ரம், ரஜினியின் படிக்காதவன் படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தி லும் படங்களை தயாரித்தவர் இவர்.
“சுமை” “சோறு” படங்களின் கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமானார் இராம நாராயணன்.வர்த்தக ரீதியில் அந்த படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால் அன்று பத்திரிகைகள் இந்த இரண்டு படங் களின் விமரிசனத்திலும் இயக்குனர் இராம நாராயணன் அவர்களை சிறந்த இயக்குனராக தேர்வு செய்து கொண்டாடின.


இராம நாராயணன் தான் இயக்கிய “நன்றி” என்ற படத்தில் ஆக் ஷன் கிங் அர்ஜுனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி னார்.
முன்னாள் துணை முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது இயக்கத்தில் இரு படங்களில் நடித்தவர் என்பதை பெருமைக்குரியதாக கருதினார்
மக்களவை உறுப்பினராக இருந்த ராமராஜன் முதலில் இவரிடம் உதவியாளராக சேர்ந்து, வசனகர்த்தாவாக உயர்ந்து, பின்னர் கதாநாயகனானவர். ஒரு மாதம் ஒரு படம் என்றாலும் வருடத்திற்கு 12 படங்கள் தான் வரும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இவருடைய இயக்கத்தில் ஒரு வருடம் 13 படங்கள் வெளிவந்தன. பின்னர் இவருடைய இயக்கத்தில் விலங்குகளும் முக்கிய வேடங்களில் நடித்தன. இவருடைய படங்கள் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை தரும் படங்களாகவே இருந்துள்ளன.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, போஜ்புரி , ஒரியா, பெங்காலி, மொழிகளில் படங்களை இயக்கியவர். மலாய் மொழியிலும் படத்தை இயக்கி உள்ளார்.
126 படங்களை பல்வேறு மொழிகளில் இயக்கி சாதனை படைத்த இவருடைய சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைத்து, இவருக்கு சிலை வடித்து விழா எடுத்து திரை உலகம் கொண்டாடி இருக்க வேண்டும்என்பது பலரது எண்ணமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் வசன வரிகளில் நிறைய படங்களை இயக் கினார். கலைஞர் மீது அதிகம் பற்று கொண்டவர். காரைக்குடி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சிறப்பாக பணிபுரிந்து கலைஞரின் இதயத்தில் இடம் பிடித்தவர். ராமநாரயணானிடம் உதவியாளராக இருந்த சோழ ராஜன், ராமராஜன், தியாகராஜன், புகழ்மணி, பேரரசு ஆகியோர் இயக்குனர்கள் ஆனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இரண்டு முறை தலைவராக முதல்வர் கலைஞரால் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி கலைஞரிடம் பாராட்டு பெற்றவர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயலாற்றி தயாரிப்பாளர்களின் நன்மதிப்பை பெற்றவர்.
இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கையில் தான் தயாரிப்பாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு கொண்டு வரப்பட்து.
60 வயதிற்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் விரும்பிக் கேட்டால் அவர்களுக்கு மாதம் தோறும் அன்புத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கத்திடம் பேசி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் பத்தில் ஒரு பங்காக குறைத்து தயாரிப்பாளர்களை பயனடைய வைத்தார்.
பிலிம்சேம்பர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரிதும் உதவியாய் இருந்தவர். அப்போது முதலவராக இருந்த கலைஞரிடம் பேசி தயாரிப்பாளர்களுக்கும் “கலைமாமணி ” விருது கிடைக்க செய்தார்.
சென்னை அருகே பையனுாரில் தயாரிப்பாளர்களுக்கு பத்து ஏக்கர் நிலத்தை அன்றைய முதல்வரான கலைஞரிடம் கேட்டு வாங்கி தயாரிப்பாளர் கவுன்சில் பெயரில் பதிவு செய்தார். தயாரிப்பாளர்களுக்காக வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தை பதிவு செய்தவரும் இவர் தான்.
நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் முற்றிலும் கேளிக்கை வரி ரத்து என்ற அரசாணையை முதல்வர் கலைஞரிடம் பெற்றுத் தந்தார்.
கவுன்சிலுக்கு வந்த பஞ்சாயத்துகளில் உள்ள விஷயத்தை நன்கு உள்வாங்கி இரு சாராரும் கை குலுக்கி இன் முகத்துடன் ஒப்புக் கொள்ளும் தீர்ப்பாக இவரது செயல்பாடு இருக்குமாறு கடுகளவும் பிறழாமல் பார்த்துக் கொள்வார். இப்படி இவரது சாதனையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராய் இருந்த காலம் தமிழ் திரை உலகிற்கு ” பொற்காலம் ” என்று இன்றும் கூறுபவர்கள் உண்டு.
இன்று 22.06.2020 அவரது நினைவு நாள். ஒருவரின் ஆயுள் இறப்பு வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை என்பார்கள்.
இராமநாராயணனும் நம் மனதில்
வாழ்கிறார். வாழ்வார். வாழ்ந்து கொண்டே இருப்பார்.
இவ்வாறு தயாரிப்பாளர் விஜயமுரளி கூறி உள்ளார்.