மும்பை: ஆன்லைனில் வெறுப்பைக் கக்குவதை விட்டுவிட்டு, இந்த சவாலான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா.
அவர் கூறியுள்ளதாவது, “ஆன்லைன் சமூகம், ஒருவருக்கொருவரை காயப்படுத்துவதாகவும், ஒருவரையொருவர் வீழ்த்த முயற்சிப்பதாகவும் இருக்கிறது.
இந்த ஆண்டு, நம் அனைவருக்குமே மிகுந்த சவாலான ஒன்று. ஆன்லைன் சமூகம் எதையுமே விரைவாக முடிவுசெய்து விடுகின்றனர். இந்த ஆண்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்று அறைகூவல் விடுக்கிறது.
நாம் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புகாட்டி, அதிக புரிதலுடன் செயல்பட்டு, வழக்கத்தைவிட அதிகப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். விஷயம் எதுவாக இருந்தாலும், பொறுமையைக் கடைப்பிடித்து, வெறுப்பையும் பகைமையையும் வெளிப்படுத்துவதற்கு பதிலாக, பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றுள்ளார்.