பசுவும்,கங்கையும், கீதையும் இந்தியாவின் அடையாளம் -அமைச்சரின் கண்டு பிடிப்பு
உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. அமைச்சர்கள், புதிய ‘’கண்டுபிடிப்பு’’களுக்கும், சர்ச்சை கருத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் என்பது தெரிந்த விஷயம்.
அந்த மாநில பா.ஜ.க.அரசு, பசுவதை செய்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன் என்பது குறித்து அந்த மாநில பால்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சவுதாரி அளித்துள்ள பேட்டியில்,’’ முந்தைய ஆட்சியில் பசு வதையைத் தடுக்க சரியான சட்டம் இல்லாததால் ஏராளமான பசுக்கள் கொல்லப்பட்டது’’ என்று குற்றம் சாட்டினார்.
‘’ தாய்ப்பாலுக்கு அடுத்த படியாகப் பசுக்களின் பால்தான் சின்ன குழந்தைகளுக்குச் சிறந்த ஆகாரம் என மருத்துவர்கள் சொல்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ‘’ பசுவும், கங்கை நதியும், பகவத்கீதையும் தான் இந்தியாவின் அடையாளங்கள் ‘’ என்றார்.
‘’ இந்த மூன்றும் இந்தியாவில் இருப்பதால் தான் நமது நாடு, உலகின் தலைவராக உயர முடிந்தது’’ என்று மார் தட்டுகிறார் அந்த அமைச்சர்.
– பா.பாரதி