நேபாள வானொலிகளில் விஷம பாடல்கள்..
இந்தியாவுக்குச் சொந்தமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியாட்குரா ஆகிய பகுதிகளை நேபாளம் திடீரென சொந்தம் கொண்டாடுகிறது.
இந்த பகுதிகளை, தங்கள் நாட்டோடு இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது, நேபாளம்.
நேபாளம் சொந்தம் கொண்டாடும் இந்த ஊர்கள் அந்த நாட்டு எல்லையில் இருப்பவை.
நேபாள நாட்டு எஃப்.எம்.ரேடியோக்களின் ஒலிபரப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்த ஊர்களில் தெளிவாகக் கேட்கும்.
எனவே அந்த நாட்டு ரேடியோக்கள் ஒளிபரப்பும் பாடல்கள், செய்திகளை இந்த ஊர்களில் உள்ளோர் கேட்பது வழக்கம்.
வரைபடத்தை நேபாளம் திரித்து வெளியிட்ட நாள் முதல் இந்த எஃப்.எம்.ரேடியோக்கள், இந்தியாவுக்கு எதிரான பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்துள்ளது.
‘’ காலாபானி, லிபுலேக், லிம்பியாட்குரா எங்களுக்கே சொந்தம்.. மக்களே விழியுங்கள்.. துணியுங்கள்’’ என இந்த பாடல்கள் விஷம் கக்குவதால், எல்லையோர இந்திய மக்கள் இந்த ரேடியோக்களை இப்போது கேட்பதில்லை.
– பா.பாரதி