கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு..
ஜாம்ஷெட்பூரில் உள்ள பாக்பெரா பகுதியில் கொரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர், தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
அந்த இளைஞர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி, சவரத்தொழிலாளி ராஜு தாகூர் என்பவரை, தனது வீட்டுக்கு வரவழைத்து, முடி திருத்தம் செய்துள்ளார்.
அங்கு சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அந்த சவரத்தொழிலாளியிடம் தான் அந்த பகுதியில் குடியிருப்போர், வீட்டுக்கு அழைத்து முடி வெட்டி வந்துள்ளனர்.
கொரோனா நோயாளிக்கு, ராஜு தாகூர் முடிவெட்டியது தெரிய வந்ததால்,அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து பாக்பெரா .போலீசார் கொரோனா பாதித்த இளைஞர் மீதும், அவருக்கு முடி திருத்தம் செய்த தொழிலாளி ராஜு தாகூர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-பா.பாரதி