தெலுங்கானா:
டாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், வீரமரணம் அடைந்த 20 இராணுவ வீரர்களில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர்.  இதைத்தொடர்ந்து, கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிவாரணம் என்றும், ஒரு வீட்டு மனை மற்றும் அவரின் மனைவிக்கு குரூப்-1 பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.  லடாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர் பழனி குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.