ஹாங்காங்: பத்திரிகையாளர் சுதந்திரம் ஹாங்காங்கில் ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது ஹாங்காங் பத்திரிகையாளர் சங்கம்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் 180 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள், அப்பிராந்தியத்தை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயலும் சீன அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இதனால், பத்திரிகையாளர்கள் சுதந்திரம் பறிக்கப்படுவதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம், ஹாங்காங், சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் செல்வதால், பத்திரிகை சுதந்திரத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அரசின் மீது வீண்பழி சுமத்துவோர் விஷயத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக சீன அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பிரிட்டன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, பிரிட்டீஷ் காலனியாக உள்ள ஹாங்காங்கில் ‘ஒரு நாடு இரு சட்டம்’ என்ற நடைமுறை 2047ம் ஆண்டு வரை அமலில் இருக்க வேண்டும். ஆனால், சீனா அதனை 2020ம் ஆண்டிலேயே முடித்துவைக்க முயல்கிறது. சர்வதேச பத்திரிகையாளர் சங்கமான ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பும் சீன அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஹாங்காங் வெளியிறவுத்துறை இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் கூடும் இடமாக விளங்குகிறது ஹாங்காங். இது, தற்போது சீன அரசால் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதானது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.