ண்டிகர்

டாக் எல்லைப்பகுதியை காக்க ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை அனுப்பினால் அவர்கள் தடியடி நடத்திப் போரிடுவார்கள் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியச் சீன எல்லையில் முகாமிட்டிருந்த சீனப்படைகள் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு திரும்பிச் செல்லும் போது இந்திய ராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை நடத்தி உள்ளனர்  இதில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர்.   சீனத் தரப்பில் யாரும் உயிர் இழந்ததாகத் தகவல்கள் வெளி வரவில்லை.  சீனப்படையினர் ஆணிகள் பதித்த கட்டைகள் மற்றும் ராடுகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ”நமது படை வீரர்கள் 20 பேர் சீனத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளது மிகவும் வருத்தத்துக்குரியது.  சீனப்படைகள் ஆணிகள் பொருத்தப்பட்ட அயுதங்களால் தாக்கி உள்ளனர்..  இதனால் நமது வீரர்களை நாம் இழந்துள்ளோம். சீனத் தரப்பில் எவ்வித உயிர்ச் சேதமும் இல்லை.  நமது வீரர்கள் ஆயுதம் உபயோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு உத்தரவு பிறப்பிக்காமல் விட்டது யார் என்பதும் ஏன் என்பதும் தெரியவில்லை.  மத்திய அரசு நமது வீரர்களை மல்யுத்தம் செய்யச் சொல்கிறதா அல்லது கம்புச் சண்டை இடச் சொல்கிறதா எனத் தெரியவில்லை.  கம்புச் சண்டை இடவேண்டும் என்றால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை அனுப்பி தடியடி நடத்தி அதன் மூலம் எல்லையைக் காக்கச் சொல்லலாம்.” எனக் கூறி உள்ளார்.