டெல்லி:
ஜூன் 20ந்தேதி (நாளை) முதல் ஜூலை 6ந்தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றங்களுக்கும் ஆண்டுதோறும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, நீதிமன்ற பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் காணொளி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உச்சநீதி மன்றம், கோடைகால விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாளை முதல் (ஜூன் 20) ஜூலை 6-ம் தேதி வரை, 16 நாட்fள் உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், மே மாதம் இறுதியில் இருந்து ஜூலை 5ந்தேதி வரை சுமார் 5 வாரங்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டும் மே 18-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி” கோடை விடுமுறை என ஏற்கனவே உச்சநீதிமன்ற காலண்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கோட்டை விடுமுறை ஒத்தி வைக்கப்படுவதாக உச்சநீதி மன்றம் ஏற்கனவே அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது ஜூன் 20 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக மார்ச், ஏப்ரலில் சிலவாரம் செயல்படாததால் தற்போது விடுமுறை காலம் குறைக்கப்பட்டு உள்ளது.