டெல்லி:
மோடி அமைதி ஏன்? போதும்… போதும்… என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், சீனா நம் வீரர்களைக் கொல்ல எவ்வளவு தைரியம்? அவர்கள் எப்படி நமது நிலத்தை எடுத்துக்கொள்ள முடியும் என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று முன்தினம் காஷ்மீர் பகுதியான லடாக் பகுதியில் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுட்ன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையட்டி, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, சீன தாக்குதல் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அமைதி ஏன் ? மோடி எதை மறைக்கிறார்? போதும் போதும், உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் என்ன இருக்கிறது என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும்,சீனா நம் வீரர்களைக் கொல்ல எவ்வளவு தைரியம்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
என்றார்.