சென்னை:

நாடு முழுவதும் தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் தலையில், இந்த விலை உயர்வு மேலும் இடியை இறக்கி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக விலை உயர்வு இன்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் டீசல் விலை கடந்த 4ந்தேதி முதல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது- இன்று  10வது நாளாக  தொடர்நது விலை உச்சம் அடைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை 6 மணி முதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 48 பைசா அதிகரித்துள்ளது.  கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.47ம், டீசல் விலை ரூம் 5.80ம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் 16ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை 41 பைசா உயர்ந்து 80.37க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 0.48 பைசா உயர்ந்து 73.17க்கு விற்பனையாகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.45 பைசா உயர்ந்து 83.62 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 0.54 பைசா உயர்ந்து 73.75க்கு விற்பனையாகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 0.47 பைசா உயர்ந்து 76.73 பைசாவுக்கு விற்பனையாகிறது.  டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா உயர்ந்து 75.19க்கு விற்பனையாகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.45 பைசா உயர்ந்து 78.55 க்கு விற்பனையாகிறது.   டீசல் விலை 0.51 பைசா உயர்ந்து 70.84க்கு விற்பனையாகிறது.