முதல்வர் வீட்டு விழாவில் கொலை கைதி.. சர்ச்சையில் சிக்கிய பினராயி விஜயன்…
கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முகமது ரியாசுக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் நேற்று திருமணம் நடந்தது.
பினராயிவிஜயன், மணமக்களை வாழ்த்தினார்.
ரியாஸின் பெற்றோர்கள், 65 வயதைக் கடந்தவர்கள் என்பதால், கொரோனா விதிகளை மதிக்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்க வில்லை.
ஆனால் ரியாசின் நெருங்கிய உறவினரான முகமது காசிம் , இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காரணம் என்ன?
காசிம், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் சுரேஷ்பாபு கொலைவழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசிம், திருமணத்தில் பங்கேற்க பரோலில் வந்துள்ளார்.
‘’ முதல்வர் மகள் கல்யாணத்தில் கொலைக் குற்றவாளி கலந்து கொண்டது குறித்து பினராயி விஜயன் பதில் சொல்ல வேண்டும்’’ என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சந்தீப் வாரியார் வலியுறுத்தியுள்ளார்.
‘’எனது தாத்தா வழியில் ரியாஸ் நெருங்கிய உறவினர் என்பதால் திருமணத்தில் கலந்து கொண்டேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார், சர்ச்சையின் நாயகன், காசிம்.
–பா. பாரதி