ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் –19 ஆன்டிஜென் கண்டறிதல் என்பது, பரிசோதிக்க வேண்டிய நபர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என இருக்கும் மாதிரிகளை வைத்து 15 நிமிடங்களுக்குள் அறிந்துக் கொள்ளும் விரைவான பரிசோதனை முறை ஆகும். இதில் பரிசோதனை முடிவுகளை எவ்வித சிறப்பு உபகரங்களும் இன்றி, வெறும் கண்களாலேயே காண முடியும்.
புதுடெல்லி: ஆர்டி-பி.சி.ஆர் சோதனையுடன் இணைந்து, குறிப்பிட்ட சில அமைப்புகளின் கீழ், நம்பத்தகுந்த தரமான நோயறிதல் சோதனையாக, ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் -19 ஆன்டிஜென் கண்டறிதல் சோதனையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிந்துரைத்துள்ளது. விரைவான ஆன்டிஜென் சோதனை மூலம் COVID-19 க்கு நெகடிவ் முடிவுகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக RT-PCR சோதனையையும் செய்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் ஒரு பாசிடிவ் முடிவுகளைப் பெற்றவர்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை என ICMR கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
சோதனைக்கு பிறகு, சோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்ட்ரிப் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும். சோதனைக் கிட் 2 ° முதல் 30 °C க்கு இடைப்பட்ட வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். ஒப்பீட்டளவில் குறைந்த உணர்திறன் மற்றும் உயர்த்தப்பட்ட குறிப்பாக செயல்படும் திறன் காரணமாக, ஐ.சி.எம்.ஆர் ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் -19 ஆன்டிஜென் கண்டறிதல் சோதனையை, அதிவிரைவு தங்க தரநிலை RT-PCR சோதனைக்கு பிறகு கட்டாய சோதனையாகச் செய்ய பரிந்துரைக்கிறது. A. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்காணிப்பு மண்டலங்கள் அல்லது ஹாட்ஸ்பாட்கள் (கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் அங்கேயே செய்யப்பட வேண்டும். மேலும், பரிசோதனைக் கிட்கள் 2 ° முதல் 30 ° C க்கு இடைப்பட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்பப்பட வேண்டும்.):
A) இன்புளுயன்சா போன்ற அனைத்து காய்ச்சல் அறிகுறிகள் கொண்டவர்கள் ii) உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பில் இருந்த ஆனால் அறிகுறி இல்லாதவர்களும், வேறு நோய்கள் (நுரையீரல் நோய், இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், நீரிழிவு, நரம்பியல் கோளாறுகள், இரத்தக் கோளாறுகள்) ஆகியவற்றைக் கொண்ட அறிகுறி இல்லாதவர்களும், நேரடி தொடர்பு ஏற்பட்ட 5 நாள் முதல் 10 ஆம் நாளுக்குள்ளாக ஒரு முறை சோதிக்கப்பட வேண்டும்.
B) ஹெல்த்கேர் அமைப்புகள் (கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் இருப்பிடத்திலேயே சோதனை செய்யப்பட வேண்டும் மற்றும் கிட் வெப்பநிலையை 2° முதல் 30°வரை பராமரிக்க வேண்டும்
C) சுகாதார மையங்களில் உள்ள அனைத்து அனைத்து அறிகுறி கொண்டவர்களும் ILI நோயாளிகள், COVID-19 நோய்த்தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறவர்கள் ii) மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது செர்க்கபடவிருக்கும் அறிகுறியற்ற பின்வரும் அதிக அபாயத்திற்கு உரியவர்கள் : கீமோதெரபிக்கு உட்பட்ட நோயாளிகள், எச்.ஐ.வி உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு தடுப்பு சிகிச்சை மேற்கொள்பவர்கள், புற்று நோயாளிகள், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், வயதானவர்கள் (65 வயதுக்கும் மேற்பட்டவர்கள், கூடுதலாக வீரியமிக்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (நுரையீரல் நோய், இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், நீரிழிவு, நரம்பியல் கோளாறுகள், இரத்தக் கோளாறுகள்) iii) ஏரோசல் உருவாக்கும் அறுவை சிகிச்சை / அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சை மேற்கொள்ளும், அறிகுறியற்றவர்கள் – தேர்ந்தெடுக்கப்பட்ட / நரம்பியல் அறுவை சிகிச்சை, ஈ.என்.டி அறுவை சிகிச்சை, பல் நடைமுறைகள் போன்ற அவசர அறுவை சிகிச்சை முறைகள்; ப்ரோன்கியோஸ்கோபி, மேல் ஜி.ஐ எண்டோஸ்கோபி மற்றும் டயாலிசிஸ் போன்ற அறுவைசிகிச்சை அல்லாதவற்றை மேகொண்டவர்கள். ஒரு ILI நோயாளி என்பவர் காய்ச்சல் (> = 38°C மற்றும் இருமல் ஆகியவற்றுடன் கடுமையான சுவாச நோய்த்தொற்று உள்ள ஒருவர் ஆவர்.
பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேலே உள்ள A & B வகைகளில் கூறப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு விரைவான ஆன்டிஜென் கண்டறிதல் சோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது:
i) விரைவான ஆன்டிஜென் சோதனையின் மூலம் COVID-19 க்கு நெகடிவ் முடிவுகளை பெரும் நபர்கள், கண்டிப்பாக RT-PCR பரிசோதனை மேற்கொண்டு உறுதியான பிறகே நெகடிவ் முடிவுகளை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் ஒரு பாசிடிவ் முடிவைப் பெற்ற ஒருவர் RT-PCR செய்யத் தேவை இல்லை.
ii) முறையான பிபிஇ பயன்பாடு உள்ளிட்ட முழு தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் (மூக்கினுள் பஞ்சை உட்செலுத்தி துடைத்தெடுத்தல் முறை).
iii) கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மற்றும் பிரித்தெடுக்கும் வேதி திரவம் கொண்டு, சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து, ஒரு மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட வேண்டும். ஒரு பின்னணியைக் கொடுத்து, ஐ.சி.எம்.ஆர், “ரியல் டைம் ஆர்டி-பி.சி.ஆர் என்பது COVID19 ஐக் கண்டறிவதற்கான தங்க தரநிலை முன்னணி சோதனை முறை ஆகும். தற்போது இந்தியாவில், பல்வேறு திறந்த மற்றும் மூடிய RT-PCR தளங்கள் (திறந்த அமைப்புகள் RT-PCR இயந்திரங்கள், TrueNat மற்றும் CBNAAT இயந்திரங்கள்) தற்போது இந்தியாவில் COVID19 நோயறிதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ”
இந்த அனைத்து தளங்களுக்கும் உபகரணங்கள், உயிர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு ஆய்வக வசதிகள் தேவைப்படுகின்றன. சோதனைக்கு எடுக்கப்படும் குறைந்தபட்ச நேரம் வெவ்வேறு அமைப்புகளுக்கு ஏற்றவாறு மாதிரிகள் சேகரிப்பு, போக்குவரத்து நேரம் உட்பட , 2-5 மணிநேரம் வரை மாறுபடும். இந்த விவரக்குறிப்புகள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் பரவலான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இது பல்வேறு கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் மருத்துவமனை அமைப்புகளில் சோதனை திறனை மேம்படுத்தப்படுவதைத் தடுக்கின்றன. “இதைக் கருத்தில் கொண்டு, நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான நல்ல உணர்திறன் மற்றும் தனித்தன்மையுடன் நம்பகமான கவனிப்பை முன்னிறுத்தும் விரைவான ஆன்டிஜென் கண்டறிதல் சோதனையின் அவசர தேவை உள்ளது” என்று ICMR வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
இப்போது வரை, உலகளவில் நம்பகமான ஆன்டிஜென் கண்டறிதல் சோதனைகள் எதுவும் இல்லை, அவை COVID-19 பாசிடிவ் நோயாளிகளை விரைவாகக் கண்டறிவதற்கான விரைவான மற்றும் பராமரிப்பு சோதனைகளாகப் பயன்படுத்தப்படலாம். இத்தகைய சோதனைகள், சோதனை முறை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க உதவிகளை முறையாக செயல்படுத்த உதவும். இத்தகைய சோதனைகள் சுகாதாரப் பணியாளர்களின் பயத்தைத் தீர்ப்பதற்கும், சிறந்த மருத்துவ நிர்வாகத்திற்கும் உதவும். இதைக் கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட இரண்டு ஆன்டிஜென் கண்டறிதல் சோதனைகள்: நிலையான Q COVID-19 ஆன்டிஜென் கண்டறிதல் கிட் – அதன் உணர்திறன், தனித்தன்மை மற்றும் பயன்பாட்டின் சாத்தியக்கூறுகளை ஒரு புள்ளியில் மதிப்பிடும் நோக்கத்துடன் SARS-CoV-2 ஐ முன்கூட்டியே கண்டறிவதற்கான பராமரிப்பு சோதனைகள் நடத்தப்பட்டது என்று ICMR தெரிவித்துள்ளது.
விரைவில் கொரோனாவை வெற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவோம்!!
தமிழில்: லயா