டில்லி

ந்தியாவுக்கு அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் இன்று வந்து சேர உள்ளன.

உலகெங்கும் பாதிப்பு உண்டாக்கி வரும் கொரோனாவை எதிர்த்து அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.   கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டறியப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.  அத்துடன் நட்பு நாடுகள் ஒன்றுக்கொன்று மருந்துகளை அளித்து வருகின்றன..

கடந்த ஏப்ரல் மதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டபடி இந்தியாவில் இருந்து மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.  அப்போது அதற்குப் பதில் இந்தியாவுக்கு  உயர் தொழில்நுட்ப வெண்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்க உள்ளதாக அதிபர் டிர்மப் தெரிவித்தார்.

இதில் முதல் கட்டமாக அமெரிக்கா 100 வெண்டிலேட்டர்களை அனுப்பி உள்ளது.  சிகாகோ நகரில் தயாரிக்கப்பட்ட இந்த வெண்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று எடுத்து வரப்படுகிறது.  இவை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.