கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்..
பா.ஜ.க.வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் எப்போதும் பரம விரோதிகள்.
சித்தாந்த அடிப்படையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, இவர்கள் நட்பு பாராட்டுவது அபூர்வம்.
இந்த நிலையில் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, கேரளா சுகாதார அமைச்சர் சைலஜாவை வானளாவ புகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘’ கொரோனாவை தடுப்பதில் கேரள மாநிலம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கொரோனா தொற்றைத் தடுக்க அவர்கள் புதுமையான வழிகளைக் கையாள்கிறார்கள்.இது தொடர்பாக நான் அடிக்கடி கேரள சுகாதார அமைச்சர் மேடம் கே.கே.ஷைலஜாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்று பேட்டி அளித்து வியப்பூட்டியுள்ளார், கோவா மாநில பா.ஜ.க. அமைச்சரான ரானே.
– பா. பாரதி