புதுடெல்லி: தற்போதைய தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளால், டெல்லியின் புகழ்பெற்ற கான் மார்க்கெட் பகுதியிலுள்ள 40% உணவகங்கள்(ரெஸ்டாரண்ட்டுகள்) மூடப்படுகின்றன.
இந்தத் தகவல் டெல்லிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Cafe Turtle, Smoke House Deli உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவை.
அதிக வாடகை, வேலைநேரம் குறைப்பு, இரவுநேர ஊரடங்கு போன்றவைகளால், 40% ரெஸ்டாரண்ட்டுகள் மூடப்படுகின்றன. மேலும், இனிவரும் நாட்களில் பல கூடுதல் ரெஸ்டாரண்ட்டுகளும் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியின் கான் மார்க்கெட் பகுதி ரெஸ்டாரண்ட்டுகள் நகரில் புகழ்பெற்றவை. தமக்கென்று ஒரு தனி வாடிக்கையாளர் வட்டத்தைக் கொண்டவை. எனவே, அவற்றில் பல, தற்போது மூடுவிழா காண்பதானது, டெல்லிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.