முதலமைச்சர் மகளுக்கு அரசியல் தலைவருடன்  இரண்டாம் திருமணம்..

கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா, பெங்களூரூவில் ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

இவருக்கும், முகமது ரியாஸ் என்ற அரசியல் தலைவருக்கும் வரும் 15 ஆம் தேதி  திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடக்கிறது.

இது கலப்பு திருமணம்.

அது மட்டுமல்ல.

இருவருக்கும் இது இரண்டாம் திருமணம்.

இருவரும் தங்கள் வாழ்க்கைத் துணையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து செய்து விட்டனர்.

 40 வயதான வீணாவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

44 வயதான ரியாசுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

முகமது ரியாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI) அகில இந்தியத் தலைவராக இருக்கிறார்.

வழக்கறிஞர்.

இவரது தந்தை அப்துல்காதர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

மணமகன் ரியாஸ், கடந்த 2009 ஆம் ஆண்டு கோழிக்கோடு மக்களவை தொகுதியில் சி.பி.எம். வேட்பாளராகப் போட்டியிட்டு வெறும் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகவன் அப்போது ஜெயித்தார்.