அசத்தும் காங்கிரஸ்: கட்சிக்குள் திருநங்கைகள் அணி..
அரசியல் கட்சிகள், தங்கள் இயக்கத்தில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி என பல அணிகளை இணை பிரிவாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் முதன் முறையாக, ஒரு புதிய முயற்சியாகக் கேரள காங்கிரஸ் கட்சி ‘திருநங்கைகள் அணி’ என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.
முதல் கட்டமாக இந்த அணியில் 50 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குக் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் முள்ளம்பள்ளி ராமச்சந்திரன் , திருவனந்தபுரத்தில் புதன் கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குகிறார்.
திருநங்கைகள் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கேரளம் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்துள்ளது என்று சொல்லலாம்.
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்தது, திருநங்கைகளுக்கு வாரியம் அமைத்தது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கேரளாவில் சுமார் 35 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.