சரித்திரத்தில் முதன் முறையாகச் சரக்கு விலை குறைப்பு..
ஏற்றப்பட்ட பொருட்களின் விலை மீண்டும் குறைக்கப்பட்டதாக வரலாறு இல்லை.
சில அரசுகள் விதி விலக்கு.
பேருந்து மற்றும் மின்சார கட்டணத்தை அவ்வப்போது அரசுகள் உயர்த்தும்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால், கொஞ்சம் குறைக்கும்.
ஆனால் உயர்த்தப்பட்ட மதுபானங்கள் விலை மீண்டும் குறைக்கப்பட்டதாக , இந்தியாவில் முன் உதாரணம் இல்லை.
டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு, ஒரு புதிய உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு விதிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தளர்த்தப்பட்ட நிலையில் டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் மதுபான விலையை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது.
’கொரோனா வரி’ என்ற பெயரில் மதுபானம் மீது 70 % வரி விதித்தது.
இதனால் 100 ரூபாய் குவாட்டர் பாட்டில் விலை 170 ரூபாயாக அதிகரித்தது.
விற்பனை சரிந்தது.
சரக்குகள் குடோனிலும், மதுபான ஆலைகளிலும் தேங்கின.
‘’ஏதாவது செய்தால் தவிர இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது’’ என மதுபான உற்பத்தி ஆலை அதிபர்கள், அரசை நச்சரிக்க கொரோனா வரி 70% ஐ டெல்லி அரசு வாபஸ் பெற்றுள்ளது.
எனினும் மதுபானம் மீதான ‘வாட்’ வரி 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
’வாட் ‘பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த விலை குறைப்பு டெல்லியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொண்டாட்டத்தில் உள்ளனர், குடிமகன்கள்.
– பா.பாரதி