மும்பை:
விமான பயணத்தின்போது, நடு இருக்கையிலும் அமர பயணிகளுக்கு அனுமதியளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விமானத்தின் நடு இருக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை குறித்து விமான போக்குவரத்து ஆணையத்தின் உயர்நிலைக்குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது என்று தெரிவித்தது. அவர்கள் தெரிவித்த தகவலின்படி, ஒருவரை தொடுவது, தும்மல் மற்றும் சளியின் மூலமாகவே கொரோனா பரவுவதாக தெரிவிக்கப்பட்டது.
கை குலுக்குவதை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல் மூலமாக கொரோனா பரவுதலை தடுக்க முடியும் என்பதால் இதற்கான வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதே முக்கியம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, நடு இருக்கையை காலியாக விடத் தேவையில்லை எனக் கருதுவதால், இனி விமானப் பயணத்தில் 3 இருக்கையிலும் பயணிகள் அமர அனுமதிக்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.