புதுடெல்லி: அடுத்த 2022ம் ஆண்டின் பெண்கள் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 2022ம் ஆண்டு பெண்கள் ஆசிய கால்பந்து தொடரை நடத்துவதற்கு இந்தியாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனையடுத்து, அதிகாரப்பூர்வ அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து கோப்பை மற்றும் 2017ம் ஆண்டு 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஃபிபா உலகக்கோப்பை தொடர்கள் இந்தியாவில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கவிருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஃபிபா உலகக்கோப்பைத் தொடர் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.