ஐதராபாத்: கொரோனா பரவல் காரணமாக, ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், அத்தொடர் மாற்று தேதியில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தாண்டின் ஆகஸ்ட் 11 முதல் 16 வரையிலான காலக்கட்டத்தில், ஐதராபாத்தில் சர்வதேச பாட்மின்டன் தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வைரஸ் தொற்று இன்னும் வீரியம் குறையாத காரணத்தால், இத்தொடரை ரத்துசெய்யும் முடிவை எடுத்தது உலக பாட்மின்டன் கூட்டமைப்பு.
இதற்கிடையில், அந்தக் கூட்டமைப்பு வெளியிட்ட புதிய அட்டவணையில், இத்தொடரும் இடம்பெற்றதால், இப்போட்டி மாற்றுத் தேதியில் நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இதனையடுத்து, இத்தொடரை மாற்றுத் தேதியில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்த அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளது.